தேடல்.

முடிவில்லா தொடர்கதை!!!!

விடை சொல்!

காதல் நிலவே
காதல் காதலென்று கலக்கித் தவித்தேன்
காகிதமென்று கசக்கி எரிந்தாயா!-இல்லை
கானலென்று கடந்து சென்றாயா!

கனநேரமேனும் உன்னைக்
காணாவிடில்
கரைந்துபோகிறதே எனது உயிர்

கண்ணின் மணியே!
காதல் செய்வாயா?-இல்லையென்னை
கண்ணீராய்
கரைந்துபோக வைப்பாயா?
 
வாருங்கள் வரவேற்கிறேன்
கவிதையோடு கலந்து.

4 Response to "விடை சொல்!"

LK said...

பதிவுலகிற்கு வரவேற்கிறேன் கவிதை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள் ..

சுந்தரா said...

தேடும் மனதுக்கு வரவேற்புகள்.

நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்.

காஞ்சி முரளி said...

பால்யப் பருவத்தில்... 'தேடலின்' துவக்கம்...!
பள்ளிபருவத்தில் அறிவுத் "தேடல்"...!
இளமைப் பருவத்தில்... அதாவது கல்லூரிப்பருவத்தில்...
இளமைத்தீயை அணைக்க காதலெனும் 'தேடல்'...
பின்...
வாழ்வியலில்...
வாழ்கையைத் 'தேடல்'... அதாவது....
வேலைத் 'தேடல்'....
கிடைத்தபின்...
நல்மனையாள் 'தேடல்'...
இப்படி தாங்கள் சொல்வதைப் போல "முடிவில்லா...! தொடர்கிறது... "தேடல்"....!
'தேடல்'தான் வாழ்க்கை... அத்
'தேடலை'யே தலைப்பாய்...
வாழ்த்துக்கள்...!

"விடைசொல்" கவிதை அருமை...!
அதில்..
///கனநேரமேனும் உன்னைக்
காணாவிடில்
கரைந்துபோகிறதே எனது உயிர்///
வரிகள்.. மிகவும் அற்புதம்....

வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.......!
வாழ்த்துக்கள்...........!

நட்புடன்..
காஞ்சி முரளி...

சௌந்தர் said...

காகிதமென்று கசக்கி எரிந்தாயா!-இல்லை
கானலென்று கடந்து சென்றாயா!////

இந்த வரிகள் நல்லா இருக்கு

Photo Gallery